Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பல்கலைக்கழக மாணவி கீழே விழுந்து மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பல்கலைக்கழக மாணவி கீழே விழுந்து மரணம்

காஜாங், டிச. 26-

தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று வரும் அந்நிய நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர், 33 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார்.

இச்சம்பவம் நேற்று மாலை 6.34 மணியளவில் காஜாங்கில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்தது. 19 வயதுடைய அந்த மாணவி கால் இடறி, கீழே விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

வீட்டின் கழிப்பறை கதவு, பூட்டிக்கொண்டு, திறக்க முடியாத நிலையில், கண்ணாடி ஜன்னல் வாயிலாக வெளியேறுவதற்கு அவர் முயற்சி மேற்கொண்ட போது கால் இடறி விழுந்து கீழே இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அவரின் உடல் ரத்த வெள்ளத்தில் 12 ஆவது மாடியில் உள்ள நடைப்பாதையில் கிடந்ததைப் பார்த்த பொது மக்கள், போலீசுக்கு தகவல் கொடுத்ததாக ஏசிபி நாஸ்ரோன் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்