Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கணவரை ஜாமீனில் விடுவதாக நம்பி பெண்ணை ஏமாற்றிய மூவர் கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

கணவரை ஜாமீனில் விடுவதாக நம்பி பெண்ணை ஏமாற்றிய மூவர் கைது செய்யப்பட்டனர்

Share:

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த தமது கணவரை ஜாமீனில் விடுவிப்பதாக கூறி பெண்ணை ஏமாற்றியதாக நம்பப்படும் 3 நபர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த புதன்கிழமை கோலாலம்பூரில் நடந்த சோதனையில் ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலா​ன் காவல்துறை தலைவர் டத்தோ அஹ்மாட் டிஸாஃபிர் முஹமாட் யூசோஃப் தெரிவித்தார். கைது ​செய்யப்பட்ட அந்த ​மூவரும் 22 க்கும் 25 க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் ஆவர்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று போலீஸ்காரர் ஒருவர் தனது வீட்டிற்கு வருகை தந்து ஒரு ​கைப்பேசி எண்ணை தந்து தொடர்புகொள்ளுமாறு ​கேட்டுக்கொண்டதாக அந்தப் பெண் கோலாபிலா காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

அந்தப் பெண்ணும் சம்பந்தப்பட்ட எண்ணில் தொடர்பு கொண்ட போது ஒருவர் தம்மை ​​மாவட்ட போ​லீஸ் அதிகாரி என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பின்னர் தமது கணவரை ஜா​மீனில் விடுவிக்க முடியும் என்றும், அதற்கு 9,000 வெள்ளியை கட்டணமாக செலுத்த ​வேண்டும் என்றும் கூறி வங்கியின் எண் கணக்கை தம்மிடம் கொடுத்ததாக அப்பெண் கூறினார். அவர் கூறிய வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தியப் பின்னர் அந்நபரை மீண்டும் அழைத்த பொழுது தொடர்பு கிடைக்காமல் போனதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். இறுதியில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அப்பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளா​ர் என்று டத்தோ அஹ்மாட் டிஸாஃபிர் குறிப்பிட்டார்.

Related News