Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அந்நிய நாணய முதலீடு மோசடி : 51 போலீஸ் புகார்கள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்நிய நாணய முதலீடு மோசடி : 51 போலீஸ் புகார்கள்

டிச. 11-

ஒரு கோடியே 20 லட்சம் ரிங்கிட் சம்பந்தப்பட்ட எல்லைத்தாண்டிய அந்நிய நாணய முதலீடு மோசடிகள் தொடர்பில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் 51 புகார்களை பெற்றுள்ளதாக அதன் வர்த்தக குற்றவியல் தடுப்புப்பிரிவு போலீஸ் இயக்குநர் Datuk Seri Ramli Mohamed Yoosuf தெரிவித்துள்ளார்.

நாணயப் பரிவர்த்தனையில் இடைத் தரகராக செயல்பட்டு வரும் இந்தோனேசியாவை தளமாக கொண்ட ஒரு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச் சேந்த சில தனிநபர்கள், இந்த முதலீட்டு மோசடியில் மூளையாக இருந்து செயல்பட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டத்தோஸ்ரீ ரம்லி குறிப்பிட்டார்.

கடந்த செப்டம்ர் 9 ஆம் தேதி மற்றும் அக்டோபர் 25 ஆம் ததி மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த இரு தனிநபர்களை போலீசார் கைது செய்து இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →