Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பி40 மக்களுக்கு ஸ்கிம் பெருபாத்தான் மடானி  அடுத்த ஆண்டு வரை தொடரப்படும்
தற்போதைய செய்திகள்

பி40 மக்களுக்கு ஸ்கிம் பெருபாத்தான் மடானி அடுத்த ஆண்டு வரை தொடரப்படும்

Share:

2023 ஆம் ஆண்டு ஜூன் 15 முதல் மடானி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கிம் பெருபாத்தான் மடானி எனும் பி40 க்கு உட்பட்ட இலவச சிகிச்சையை இதுவரையில் 1 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் பெற்றுள்ளனர்.

இரும்பல், சளி, காச்சல், தலை வலி போன்ற சிறு சிறு நோய்களுக்கு மட்டுமே தனியார் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்று கொள்வதற்கு இத்திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது.

இதுவரையில் 2,506 தனியார் மருத்துவமனைகளில் 785,623 பேருக்கு 62.5 மில்லியன் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் டிசுல்கிஃப்லி தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 100 மில்லியன் வெள்ளி வரை அரசாங்கம் இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யவிருப்பதால் இச்சேவை அடுத்த ஆண்டும் தொடரவுள்ளது என்று டாக்டர் டிசுல்கிஃப்லி குறிப்பிட்டார்.

ப்ரொட்டெக் ஹெல்த் அல்லது மைசெஜாத்ரா அகப்பக்கத்தில் இதுகுறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என்று அவர் விவரித்தார்.

Related News