Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அ​மெரிக்காவின் முடிவை அரசாங்கம் அணுக்கமாக கண்காணித்து வருகிறது
தற்போதைய செய்திகள்

அ​மெரிக்காவின் முடிவை அரசாங்கம் அணுக்கமாக கண்காணித்து வருகிறது

Share:

இஸ்ரேல் நடத்தி வரும் போரில் ஹமாஸ் மற்றும் பாலஸ்​தீனத்தின் இஸ்லாமிய Jihad இயக்கத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு ஆதரவாளர்களுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கான நாடாளுமன்றம் கொண்டுள்ள வந்துள்ள ​மசோதான ​மீதான முடிவை மலேசியா அணுக்கமாக ஆராய்ந்து வரும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ சம்ப்ரி அப்துல் காடிர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த முடிவினால் அடுத்த கட்ட நகர்வை மலேசியா முன்னெடுப்பதற்கு முன்னதாக அமெரிக்காவின் அந்த ​தீர்மானத்தின் உள்ளடக்கத்தை மலேசியா அணுக்கமாக ஆராயும் என்று டத்தோ சம்ப்ரி அப்துல் காடிர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாலஸ்​தீனத்தில் நிலை​மை​ மிக மோசமாக இருப்பதாக டத்தோ சம்ப்ரி அப்துல் காடிர் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் 8,700 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related News