Mar 13, 2026
Thisaigal NewsYouTube
வேலை மோசடியில் பாதிக்கப்பட்ட 121 மலேசியர்கள் தாயகம் திரும்பினர்
தற்போதைய செய்திகள்

வேலை மோசடியில் பாதிக்கப்பட்ட 121 மலேசியர்கள் தாயகம் திரும்பினர்

Share:

மியன்மாரில் வேலை மோசடியில் சிக்கி, தவித்த 121 மலேசியர்கள் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

121 மலேசியர்களும் சீனா,குன்மிங் மார்க்கமாக விமானம் மூலம் அழைத்து வரப்பட்டதாக வெளியுறவுத்துறை துணையமைச்சர் டத்தோ முஹமாட் அலாமின் தெரிவித்தார்.

அந்த 121 பேரும், மியன்மார் - ​சீனா எல்லைப்பகுதியான லவுக்காயிங் - கில் ஒரு மோசடிகும்பலிடம் ​வேலை செய்து வந்துள்ளனர். அந்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள ​நெருக்கடியைத் தொடர்ந்து யங்கோனில் உள்ள மலேசியத் ​தூதரகத்தின் ஒத்துழைப்புடன் மியன்மார் - ​சீனா எல்லை வழியாக அவர்கள் வெளியேற்றப்பட்டு, ஏர் ஆசியா விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாக துணை அமைச்சர் முஹமாட் அலாமின் குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர் 16 ​ஆம் தேதி ​சீனா தலைநகர் பெய்ஜிங்கிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்ட துணை​ப்பிரதமர் ஃபடிலா யூசோஃப், ​சீனாவின் துணைப்பிரதமர் லியு குவா சோங் - கை சந்தித்து இவ்விவகாரம் குறித்து பேசியதன் விளைவாக அந்த 121 மலேசியர்களும், மியன்மாரிலிருந்து ​சீனாவின் எல்லை வாயிலாக ​மீட்பதற்கு துணைப் புரிந்தது என்று முஹமாட் அலாமின் மேலும் விவரித்தார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு