Mar 14, 2026
Thisaigal NewsYouTube
6,576 கிரிமினல் குற்றவாளிகள் மின்னணு சாதனம் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர் ஐஜிபி கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

6,576 கிரிமினல் குற்றவாளிகள் மின்னணு சாதனம் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர் ஐஜிபி கூறுகிறார்

Share:

நாட்டில் 2015 ஆம் ஆண்டு முதல் கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை மொத்தம் 6,576 கிரிமினல் குற்றவாளிகளுக்கு மின்னணு கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு, அவர்களின் நடமாட்டத்தை போலீசார் அணுக்கமாக கண்காணித்து வருகின்றர் என்று அரச மலேசிய போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்துள்ளார்.

குண்டர் கும்பல்களில் சம்பந்தப்பட்டவர்கள், கடுங்குற்றங்களில் ஈடுபட்டவர்கள், மனித கடத்தல், சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான SOSMA (சொஸ்மா) , POCA (போக்கா) முதலிய சட்டங்களின் கீழ் பிடிபட்டவர்கள், வர்த்தக, சொத்துடைமை குற்றங்கள் புரிந்தவர்கள், போதைப்பொருள் கடத்தல் பேர்வழிகள், மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்பட்டவர்கள் ஆகியோர் EMD எனப்படும் போலீசாரின் மின்னணு கண்காணிப்பு சாதனங்கள் பொருத்துப்பட்டுள்ள நபர்களில் அடங்குவர்.

சம்பந்தபட்ட குற்றவாளிகளின் ஒவ்வொரு அசைவையும் போலீசார் அணுக்காக கண்காணித்து வருகின்றனர் என்று ஐஜிபி விளக்கினார்.

இவர்கள் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் அவர்களின நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது போலீசாரின் ராடார் கண்காணிப்பு முறையின் கீழ் உள்ளது என்று Tan Sri Razarudin Husain தெளிவுபடுத்தினார்.

சிறைச்சாலைகளில் நிலவி வரும் கைதிகளிள் இட நெரிசலை குறைப்பதற்காவே இவர்கள் PAROL ( பாரோல் ) முறையின் கீழ் விடுவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று ஐஜிபி. விளக்கினார்.

Related News