அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பெஞின் ஓய்வூதிய முறை அகற்றப்பட வேண்டும் என்று மூடா கட்சியின் தலைவரும், மூவார் எம்.பி.யுமான சையத் சாதிக் அப்துல் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்க ஊழியர்களைப் போல ஓய்வூதியம் வழங்கப்படுவதைக் காட்டியிலும் மற்றத் தொழிலாளர்களைப் போல அவர்களை தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று சையிட் சாடிக் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஓய்வூதிய முறை அகற்றப்படுவதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை தாம் முழுமையாக ஆதரிப்பதாக முன்னாள் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சருமான சையிட் சாடிக் குறிப்பிட்டார்.
இபிஎப் திட்டத்தில் பங்கு கொண்டுள்ள சாமானிய மக்கள், எத்தகைய சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர் , ஓர் அவசரத் தேவைக்கு அந்தப் பணத்தை எடுக்க முடியாமல் எத்தகைய கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர், பண நெருக்கடி காலத்தில் அவர்கள் படுகின்ற துயரம் போன்றவற்றை அரசியல்வாதிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் உணரும் வகையில் அவர்கள் அனைவரையும் EPF திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று சையிட் சாடிக் தமது வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய செய்திகள்
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பெஞின் ஓய்வூதிய முறை அகற்றப்பட வேண்டும்
Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


