கோலாலம்பூர், டிசம்பர்.10-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கியின் சேவைக் காலம் அடுத்த ஆண்டு நிறைவு பெறவிருப்பதாகக் கோடி காட்டியுள்ளார்.
தம்முடைய சேவைக் கால ஒப்பந்தம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். தாம் தொடர்ந்து எஸ்பிஆர்எம்மிற்கு தலைமையேற்று இருப்பதை முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி உட்பட நிறையத் தரப்பினருக்கு விருப்பமில்லை என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு எஸ்பிஆர்எம்மிலிருந்து விலகவிருக்கும் தமக்குப் பதிலாக இறைவன் அருளில் ஒருவர் அப்பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று அஸாம் பாக்கி தெரிவித்தார்.








