ஜார்ஜ்டவுன், அக்டோபர்.11-
அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் பூட்டப்பட்டு இருந்த வீடொன்றில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜார்ஜ்டவுன், ஆயர் ஹீத்தாம், கம்போங் மெலாயுவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் அந்த மூதாட்டி உடல் அசைவின்றி கிடப்பது குறித்து பிற்பகல் 3.56 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்ஸ் தெரிவித்தார்.
பிரத்தியேகச் சாதனம் பயன்படுத்தப்பட்டு, வீட்டின் கதவு திறக்கப்பட்டு உள்ளே சோதனையிட்ட போது மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
உயிரிழந்தவர் 80 வயது P. சரோஜா என்று அடையாளம் கூறப்பட்டது. விசாரணைக்கு ஏதுவாக மூதாட்டியின் உடல், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.








