Apr 14, 2026
Thisaigal NewsYouTube
சீனப்புத்தாண்டை முன்னிட்டு சுங்கக் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி: பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்ஸண்டர் நந்தா லிங்கி அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

சீனப்புத்தாண்டை முன்னிட்டு சுங்கக் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி: பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்ஸண்டர் நந்தா லிங்கி அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.07-

சீனப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்ஸண்டர் நந்தா லிங்கி இன்று சனிக்கிழமை அறிவித்தார்.

அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கையால், அரசாங்கத்திற்கு 19.5 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தள்ளுபடியானது வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி அதிகாலை 12.01 மணி முதல் அமலுக்கு வரும் நிலையில், பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு முடிவடைகின்றது.

அதே வேளையில், இச்சலுகையானது Class 1 தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், நாட்டின் எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடிகளான Sultan Iskandar கட்டிடம் மற்றும் Tanjung Kupang டோல் சாவடிகளுக்கு இது பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புபவர்கள் மற்றும் ரமலான் மாதத்திற்கு முன்னதாகப் பயணம் செய்பவர்களின் பயணச் செலவுகளைக் குறைப்பதற்காக இந்த சலுகையானது வழங்கப்பட்டுள்ளதாக நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த தேதிகளானது, அதிகப் பயண நாட்களின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதையும், நெடுஞ்சாலைகளில் உள்ள ஓய்வுப் பகுதிகளில் கூடுதல் தளவாடங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நெடுஞ்சாலைப் பயனர்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, MyPLUS-TTA செயலி மற்றும் LLM TuJu செயலி போன்ற பயணத் திட்டமிடல் கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நந்தா லிங்கி வலியுறுத்தியுள்ளார்.

Related News

நாளை முதல் 2 லட்சம் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி: அரசாங்க  தலைமைச் செயலாளர் அறிவிப்பு

நாளை முதல் 2 லட்சம் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி: அரசாங்க தலைமைச் செயலாளர் அறிவிப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் 400 குறைந்த கார்பன் திட்டங்கள் நிறைவடையும்: அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் 400 குறைந்த கார்பன் திட்டங்கள் நிறைவடையும்: அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு

வீட்டில் தனியாக வசித்த 69 வயது மூதாட்டி உயிரிழப்பு; 4 நாட்களுக்குப் பின் உடல் மீட்பு

வீட்டில் தனியாக வசித்த 69 வயது மூதாட்டி உயிரிழப்பு; 4 நாட்களுக்குப் பின் உடல் மீட்பு

14 மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் - இரண்டு பெண்கள் மீதும் குற்றச்சாட்டு

14 மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் - இரண்டு பெண்கள் மீதும் குற்றச்சாட்டு

14 ஆவது பொதுத் தேர்தல்  தோல்விக்குப் பிறகு நஜிப் வீட்டிலிருந்து பைகள், பெட்டிகள் மாற்றம்: நீதிமன்றத்தில்  அமார் சிங் சாட்சியம்

14 ஆவது பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நஜிப் வீட்டிலிருந்து பைகள், பெட்டிகள் மாற்றம்: நீதிமன்றத்தில் அமார் சிங் சாட்சியம்

கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சித்திரைப் புத்தாண்டு சிறப்புப் பூஜை: 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சித்திரைப் புத்தாண்டு சிறப்புப் பூஜை: 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு