Oct 13, 2026
Thisaigal NewsYouTube

ட்ரோன் தடையையும் கடந்து சரியான நேரத்தில் புறப்பட்ட ஏர் ஏசியா விமானம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ட்ரோன் தடையையும் கடந்து சரியான நேரத்தில் புறப்பட்ட ஏர் ஏசியா விமானம்

கோத்தா கினாபாலுவிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்ற ஏர் ஏசியா விமானம், ட்ரோன் நடவடிக்கையால் ஓடுபாதை செயல்பாடுகள் பாதிக்கப்பட்ட நிலையிலும் நீண்ட தாமதமின்றி புறப்பட்டதால், இறுதிச் சடங்குக்குச் செல்ல வேண்டிய பெண் தனது பாட்டிக்கு இறுதி விடை கொடுக்க முடிந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு AK5135 விமானத்தை இயக்கிய 37 வயதான விமானி கோ யூ வெங் என்ற எரிக், இந்தப் பெண் சமூக ஊடகத்தில் விமானம் தாமதமாகாமல் விரைவாகச் செல்ல வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளை விமானம் தரையிறங்கிய பின்னரே அறிந்தார்.

கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்தில் ட்ரோன் நடவடிக்கையால் ஓடுபாதை செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் ஏற்பட்டதால், விமானம் தாமதமாகும் என்று அவரும் துணை விமானியும் எதிர்பார்த்தனர். எனினும், கனமழையிலும் விமானம் முன்னதாகவே புறப்பட்டதால் நீண்ட தாமதம் ஏற்படவில்லை.

இதனால் அந்தப் பெண்ணின் சகோதரி கோலாலம்பூரைச் சென்றடைந்து, அடக்கம் செய்வதற்கு முன்பு பாட்டியின் உடலைப் பார்த்து இறுதியாக முத்தமிட முடிந்தது. பின்னர் சமூக ஊடகத்தில் அந்தத் தகவலைப் பகிர்ந்த அவர், தமது வேண்டுகோளுக்குப் பதிலளித்த விமானி எரிக் தான் அந்த விமானத்தின் தலைமை விமானி என்பதை அறிந்து கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →