Jun 27, 2026
Thisaigal NewsYouTube
717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவு:விட்டதைத் தொடர்ந்து தமிழக அரசு அதிரடி
தற்போதைய செய்திகள்

717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவு:விட்டதைத் தொடர்ந்து தமிழக அரசு அதிரடி

Share:

தமிழகத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு வெளியிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவிற்குள் அமைந்துள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட இந்த 717 கடைகளும் அடுத்த இரண்டு வார காலத்திற்குள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மாணவர்களின் நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Related News