கோலாலம்பூர், ஆகஸ்ட்.17-
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தண்டனையைக் குறைக்கும் கூடுதல் ஆவணம் தொடர்பான வழக்கு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கு கடந்த ஒரு வருடமாக நிலுவையில் இருந்தது. கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி, புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் இந்த விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிட்டது. நீதிபதி அலிஸ் லோக் யீ சிங் முன்னிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.








