சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் Penjana Kerjaya நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு புரிந்துள்ளதாக நிறுவனங்களை சேர்ந்த மேலும் 4 இயக்குநர்களை எஸ்.இ.ஆர்.எம் கைது செய்துள்ளது.
அந்த 4 நபர்களும், தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளித்ததாக கூறி, அவர்கள் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து சொக்சோவிடம் பணம் கோரியுள்ளனர் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.இ.ஆர்.எம் அறிவித்துள்ளது. நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட்ட ஓப் ஹையர் 2.0 சோதனையில், நேற்று வரை 59 நிறுவன இயக்குநர்களும் மேலாளர்களும் கைது செய்யப்பட்ட வேளையில், இன்று காலை, மேலும் 4 இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.இ.ஆர்.எம் தெரிவித்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ள வேளையில், வேலையாட்களைப் பணிக்கு அமர்த்தும் ஊக்கத் திட்டங்கள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் தொடர்பான போலி உரிமைகோரல்களின் மொத்த தொகை 63 லட்ச வெள்ளியைத் தாண்டியுள்ளதாக அது குறிப்பிட்டது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


