கெடா ஏரோட்ரோபோலிஸ் செயல்திட்டம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த, தான் இதுவரை இரண்டு கடிதங்களை பிரதமருக்கு அளித்து விட்ட நிலையில் அதற்கு எந்தவொரு பதில் கடிதமும் பிரதமர் தமக்கு அனுப்பவில்லை என்று சனுசி ,பிரதமர் அன்வார் இப்ராஹிமை சாடியுள்ளார்.
கெடா ஏரோட்ரோபோலிஸ் செயல்திட்டம் குறித்து, பிரதமர் தனக்கு எல்லாம் தெரிந்தவை போல கருத்துரைப்பது சரியான போக்கு அல்ல என சனுசி கூறியுள்ளார். அந்தச் செயல் திட்டம் குறித்து பிரதமருக்கு நேரடி விளக்கம் தருவதற்காக தான் கடிதம் அனுப்பி விட்டதாக அவர் கூறினார்.
கெடா ஏரோட்ரோபோலிஸ் செயல்திட்டத்தில் கூலீம் விமான நிலையம் கட்டும் பணியும் அடங்கும் என்பதால் அந்த விமான நிலையத்தின் பாதுகாப்பு அம்சம் பற்றி எந்தவொரு விரிவன தகவலையும் பிரதமர் பெற வில்லை என குறிப்பிட்டு அந்த செயல்திட்டத்தை நிராகரிக்க அவர் வழி செய்கின்றார் என நினைப்பதாக சனுசி மேலும் கூறினார்.
7 ஆண்டுகளாக பல வல்லுனர்கள் வைத்து கட்டமைக்கப்பட்ட அந்த செயல்திட்டத்திற்கு கூட்டரசு அனுமதி வழங்கப்படாமல் இருப்பது சந்தேகத்தை வரவழிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.








