கோலாலம்பூர், ஜூலை.20-
மக்களுக்கான இன்ப அதிர்ச்சி செய்தியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் நாளை திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் இந்த அறிவிப்பு தங்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. அதே வேளையில் பிரதமரின் இந்த அறிவிப்பு வழக்கத்திற்கு மாறான இன்ப அதிர்ச்சியாக இல்லா விட்டாலும் குறைந்தபட்சம், மக்களின் வாழ்க்கைச் செலவினத்தில் நிலவி வரும் நெருக்கடியைக் குறைப்பதாக இருந்தாலே போதுமானதாகும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில், பிரதமரின் இந்த அறிவிப்பு வெறும் B40 மக்களுடன் நின்று விடாமல் அதற்கு அப்பாற்பட்டு M40 மக்களையும் கவனிப்பதாக இருக்க வேண்டும் என்று உள்ளூர் நாளேடு ஒன்று மக்களிடம் நடத்திய சந்திப்பில் பலர் தங்கள் உள்ளக்கிடக்கை வெளிப்படுத்தினர்.
இன்னும் ஓரிரு நாட்களில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை அறிவிக்கவிருகிறார் என்று கூட்டரசு பிரதேச பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஸாலிஹா முஸ்தஃபா அறிவித்து இருந்தார்.








