Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஆறுகளைப் பாதுகாப்பதில் மக்களிடையே விழிப்புணர்வு அவசியம்
தற்போதைய செய்திகள்

ஆறுகளைப் பாதுகாப்பதில் மக்களிடையே விழிப்புணர்வு அவசியம்

Share:

ஜெம்போல், செப்டம்பர்.04-

வெயில் காலத்தில் வெப்பத்தின் காரணமாக சுற்றுப்புறங்களில் தீச் சம்பவங்கள் நிகழும் சாத்தியம் இருப்பதால், சுற்றுச்சூழல் குறித்து அனைத்து தரப்பினரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கும்படி நெகிரி செம்பிலான் மாநில தொழில்முனைவோர், மனித வளம், பருவநிலை மாற்றம், கூட்டுறவு மற்றும் பயனீட்டுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் கேட்டுக் கொண்டார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் குறிப்பாக ஆறுகளில் மாசுபாடு ஏற்படாமல் பாதுகாக்கும் அதே வேளையில் மாசுபாடு தொடர்பான தகவல்களைச் சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு வீரப்பன் கேட்டுக் கொண்டார்.

பொதுமக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் ஜெம்போல், செர்டிங் ஹிலிர், கேகேஎஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான செம்பனைக் குலைகளின் சக்கைகள் கொட்டி வைக்கப்பட்ட இடத்தில் தீப்பிடித்துக் கொண்டதை மாநில சுற்றுச்சூழல் அதிகாரிகள் கண்டறிந்ததாக வீரப்பன் குறிப்பிட்டார்.

எட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் கடும் வெயிலின் காரணமாக தீப்பிடித்துக் கொண்டதாக கேகேஎஸ் நிர்வாகம் விளக்கம் அளித்தது. தீயை அணைப்பதற்கு அருகில் உள்ள ஆற்றிலிருந்து நீரை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில், தீச் சம்பவம் போன்ற எந்தவொரு சாத்தியக் கூறுகளையும் தவிர்க்க தங்கள் நிலப்பகுதியில் அவ்வப்போது கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணி அவசியம் என்று சுற்றுச்சூழல் இலாகா பரிந்துரைத்துள்ளதாக வீரப்பன் தெரிவித்தார்.

அதே வேளையில் தீச் சம்பவங்களின் போது, அருகில் உள்ள ஆறுகள் அல்லது கால்வாயில்களின் நீரைப் பயன்படுத்தும் நிலை இருப்பதால் ஆறுகளைப் பாதுகாப்பதில் மக்கள் மிகுந்த விழிப்புணர்வைக் கொண்டு இருக்க வேண்டும் என்று வீரப்பன் வலியுறுத்தினார்.

JASNS ஆய்வின் முடிவுகள், அணைக்கும் நடவடிக்கைகளில் இருந்து வடிகால் பள்ளத்தாக்கிலும் செர்டிங் நதியிலும் தண்ணீர் வெளியேறவில்லை என்பதைக் கண்டறிந்தன.

Related News

ஆறுகளைப் பாதுகாப்பதில் மக்களிடையே விழிப்புணர்வு அவசியம் | Thisaigal News