மேன்மை தங்கிய பேரா சுல்தானை இழிவுப்படுத்தி காணொளி வெளியிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிள்ளானில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் இன்று காலையில் அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்ததாக அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நூர்சியா முகமட் சாதுதீன் தெரிவித்துள்ளார். சுல்தானை நிந்திக்கும் தன்மையிலான விமர்சனங்களை பதிவிறக்கம் செய்வதற்கு அந்தப் பெண் பயன்படுத்திய கைப்பேசியையும் போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக டத்தோ நூர்சியா குறிப்பிட்டார். 1948 ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் கீழ் அந்தப் பெண்ணை தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியைப் போலீசார் பெற்று இருப்பதாகவும் அவர் மேலும் விவரித்தார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


