சிலாங்கூர், தாமான் புக்கிட் செர்டாங், பழைய இரும்புக்கடை வர்த்தகத் தளத்தில் கோணிப்பைக்குள் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து நேற்று மதியம் 1.30 மணியளவில் அடையாளம் தெரியாத ஓர் ஆடவரின் சடலம் அப்பகுதியில் மீட்கப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. ஏ.ஏ. அன்பழகன் தெரிவித்தார். அந்த நபர் கொலை செய்யப்பட்ட பின்னர் மூட்டையாக கட்டப்பட்டு அந்த உலோக மறுசுழற்சி வர்த்தக தளத்தில் வீசப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அன்பழகன் குறிப்பிட்டார்.சவப்பிரசோதனைக்காக சடலம் மருத்துவமனையின் சவகிக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


