கோத்தா கினபாலு, நவம்பர்.17-
சபா மாநிலத்தில் இணையத் தொடர்பை மேம்படுத்துவதற்காக, தொடர்புத்துறையான எம்சிஎம்சிக்கு, அரசாங்கம் 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இணையத் தொடர்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளதாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
என்றாலும், இத்திட்டமானது நிறைவடைய சில காலம் ஆகும் என்று கூறியுள்ள அன்வார், இணையத் தொடர்பை அதிகரிப்பதன் மூலம் சபா மக்களிடையே கல்வியும், அரசாங்க அலுவலகங்களில் நிர்வாகத் திறனும் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, சபாவில், Digital National Berhad என்ற நிறுவனத்தின் முயற்சியில், மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களில் 5G இணைய சேவையானது 69 விழுக்காட்டை எட்டியுள்ளது.
அடுத்தக் கட்டமாக அதனை 80 சதவிகிதமாக உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.








