Oct 9, 2026
Thisaigal NewsYouTube

தென் கொரிய அதிபருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அழைப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தென் கொரிய அதிபருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அழைப்பு

கோலாலம்பூர், ஜூன்.24-

வரும் அக்டோபர் மாதத்தில் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் – கொரியா 47 ஆவது உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும்படி தென் கொரியா அதிபர் லீ ஜா மியுங்கிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தென் கொரிய அதிபர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற லீ ஜா மியுங்கிற்கு வாழ்த்து தெரிவிக்கும் போது இது குறித்து பேசியதாகவும், அவர், கோலாலம்பூரில் நடைபெறும் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வார் என்றும் டத்தோஸ்ரீ அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் கொரியத் தலைநகர் சோலிற்குத் தாம் பயணம் மேற்கொண்டதையும் டத்தோஸ்ரீ அன்வார், நினைவு கூர்ந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →