கங்கார், நவம்பர்.26-
பெர்லிஸ் மாநிலம் கங்கார் அருகே நேற்று இரவு போலீஸ் வாகனம் ஒன்று இரண்டு மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளியதில், ஒருவர் உயிரிழந்தார் மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
நேற்று இரவு 10.20 மணியளவில், பெர்சியாரான் வவாசானில் நடந்த இச்சம்பவத்தில், போலீஸ்காரர் ஒருவர் ஓட்டி வந்த சிறிய இரக லோரி ஒன்று, இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகளை மோதியதாக மாவட்ட போலீஸ் தலைவர் Yusharifuddin Mohd Yusop தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், லோரி ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு மேல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.








