Jul 31, 2026
Thisaigal NewsYouTube
விசாரணைக்காக போலீசார் 228 மரபியல் சோதனை மாதிரி மேற்கொண்டனர்
தற்போதைய செய்திகள்

விசாரணைக்காக போலீசார் 228 மரபியல் சோதனை மாதிரி மேற்கொண்டனர்

Share:

ஆறு வயது ஓட்டிஸ்டிக் சிறுவனான செயின் ராயன் அப்துல் மாட்டின் - யின் கொலைக் சம்பவத்தை குறித்து டமான்சாரா டாமாய், இடாமான் அடுக்குமாடி குடியிருப்பில் 228 மரபியல் சோதனை மாதிரி போலீசார் சேகரித்தனர்.

குற்றவாளியை தேடும் பெரிய அளவிலான ஒரு நடவடிக்கையாக வீடு வீடாக சோதனைகள் மேற்கொள்வதுடன் குடியிருப்புவாசிகளிடமிருந்து மரபியல் சோதனை மாதிரி சேகரிக்கப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் தெரிவித்தார்.

நிலவரப்படி, அக்குடியிருப்பில் நேற்று காலை 5628 பேர் மற்றும் 2484 வீடுகள் சோதனை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இப்பணியில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 278 காவல்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் ஈடுபட்டுள்ளதாக ஹுசெயின் ஓமார் விவரித்தார்.

Related News