Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஏகேபிஎஸ் தளபதி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு - அதிர்ஷ்டவசமாகக் காயமின்றி உயிர் தப்பினார்
தற்போதைய செய்திகள்

ஏகேபிஎஸ் தளபதி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு - அதிர்ஷ்டவசமாகக் காயமின்றி உயிர் தப்பினார்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.25-

புக்கிட் காயு ஹீத்தாமில் உள்ள மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான AKPS-இன் தளபதி மீது, இரண்டு ஆயுதமேந்திய நபர்கள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதிகாலை 6.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, மூத்த உதவி ஆணையர் முஹமட் நசாருடின் எம். நாசீர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

முஹமட் நசாருடின் தனது தொழுகையை நிறைவேற்றச் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படுகிறது.

முஹமட் நசாருடினின் வாகனத்தை நெருங்கி வந்த இருவரும் அவரை நோக்கி இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகின்றது.

அதன் பின்னர் சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், முஹமட் நசாருடின் காயமின்றி உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்