மலேசியா பல்லின மக்களை கொண்ட ஒரு நாடு என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை என்று சட்ட வல்லுநரும், முன்னாள் மேலவைத் தலைவருமான தான் ஶ்ரீ டாக்டர் ரைஸ் யாத்திம் தெரிவித்துள்ளார். மலேசியா பல்லின மக்களை கொண்ட நாடு என்பதற்கு அரசமைப்புச் சட்டத்தின் கீழ் நிறைய சட்ட ஒதுக்கீடுகள் உள்ளன என்பதையும் முன்னாள் தகவல் துறை அமைச்சருமான ராயிஸ் விளக்கினார்.
அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆவது விதியின் கீழ் மலேசிய மக்கள் குறிப்பாக ஒவ்வொருவரும் சட்ட ரீதியாக சமமாக வழிநடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. தவிர, பல்லின மக்களின் பலதரப்பட்ட உரிமைகள் குறித்து அந்த சட்டத்தில் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக ராயிஸ் குறிப்பிட்டார்.
மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள். முரூட், டயாக் மக்கள் என மலேசியர்களிடையே எவ்வித பேதமின்றி அனைவரும் சமமாக நடத்தப்படுவதற்கு அரசமைப்புச் சட்டம் வகை செய்வதாக ராயிஸ் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 153 ஆவது விதி, மலாய்க்காரர்களின் சிறப்பு உரிமையையும், சபா,சராவாவில் உள்ள பூர்வக்குடி மக்களின் நலன் சார்ந்த அம்சங்களையும் வலியுறுத்துவதாக உள்ளன என்று ராயிஸ் விளக்கினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


