ஷா ஆலாம், நவம்பர்.23-
ஷா ஆலமில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணி புரியும் பெண் ஊழியர் ஒருவர், கழிவறையைப் பயன்படுத்திய போது, அங்கிருந்த இரண்டு மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பால் காலில் கடிக்கப்பட்டார். இன்று பிற்பகல் 3.46 மணிக்கு அவசர அழைப்பு வந்ததும், புக்கிட் ஜெலுதோங் தீயணைப்பு - மீட்புப் படையைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு – மீட்புப் படை தகவல் வெளியிட்டது.
விரைந்துச் செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள், 23 வயதான அந்தப் பெண்ணின் காலில் இருந்து பாம்பின் பிடியை விடுவித்து, மேல் சிகிச்சைக்காக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட இரண்டு மீட்டர் மலைப்பாம்பு பின்னர் பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.








