Sep 26, 2026
Thisaigal NewsYouTube
‘டோஹாவுக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கும் மலேசியா ஏர்லைன்ஸ்’
தற்போதைய செய்திகள்

‘டோஹாவுக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கும் மலேசியா ஏர்லைன்ஸ்’

Share:

கட்டார் தனது விமானப் போக்குவரத்துக்கான வான்வழி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட விமான சேவைகளை மட்டும் மலேசியா ஏர்லைன்ஸ் மீண்டும் இயக்கவுள்ளது.

கத்தார் நாட்டின் சிவில் வான் போக்குவரத்துதுறை வெளியிட்ட அறிவிப்பின்படி, Hamad அனைத்துலக விமான நிலையத்தில் மீண்டும் சேவைகள் படிப்படியாகத் தொடங்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், மலேசியா ஏர்லைன்ஸ் தனது டோஹாவுக்கான சேவையை வரும் ஜூலை 2 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளது.

ஆரம்பத்தில் தினமும் ஒரு முறை மட்டுமே இந்த விமான சேவை இயக்கப்படும். இதர விமான சேவைகள் அக்டோபர் 24 வரை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட வான்வெளிப் பிரச்னை காரணமாக கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் இந்தச் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News