Oct 2, 2026
Thisaigal NewsYouTube

ஷாம்சுலுக்கும் – ஆல்பெர்ட் தேவிற்கும் 6 நாள் தடுப்புக் காவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஷாம்சுலுக்கும் – ஆல்பெர்ட் தேவிற்கும் 6 நாள் தடுப்புக் காவல்

புத்ராஜெயா, நவம்பர்29-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷாம்சுல் இஸ்கண்டார் முகமட் அகினுக்கும், வர்த்தகத் தரகர் ஆல்பெர்ட் தேக்கும் 6 நாள் தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டது.

இன்று காலையில் புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட இருவரும், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களைத்ப் தடுத்து வைப்பதற்கான அனுமதியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பெற்றது.

தடுப்புக் காவல் விசாரணை கைதிகளுக்கான எஸ்பிஆர்எம்மின் ஆரஞ்சு நிற டி சட்டையில் இருவரும் கைவிலங்கிடப்பட்ட நிலையில் பலத்த பாதுகாப்புடன் புத்ராஜெயா நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

ஷாம்சுல் அமைதியாகக் காணப்பட்டாலும், வர்த்தகத் தரகர் நீதிமன்ற வெளி வளாகத்தில் குழுமியிருந்த ஊடகவியலாளர்களை நோக்கி லாவான் தெதாப் லாவான் என்று மலாய் மொழியில் உரக்கக் கத்தியவாறு நீதிமன்றத்திற்குள் நுழைந்தார்.

சபா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், பிரதமரின் முன்னாள் அரசியல் செயலாளர் ஷாம்சுலுக்கு 6 லட்சத்து 29 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கொடுத்ததாகவும் ஆல்பெர்ட் தே பகிரங்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து ஷாம்சுலின் பினாமி என்று கூறப்படும் ஒரு பெண்மணி உட்பட மூவரை எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →