Jul 30, 2026
Thisaigal NewsYouTube
இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டத்தற்கு பலத்த கண்டனம்
தற்போதைய செய்திகள்

இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டத்தற்கு பலத்த கண்டனம்

Share:

கோலாலம்பூர், ஜூலை 31-

ஹமாஸ் தேசியத் தலைவரும் அதன் அரசியல் அமைப்பின் தலைவருமான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அதன் அரசியல் பிரிவின் தலைவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பை மேற்கோள் காட்டி அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாங்கள் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதைக் கண்டிக்கிறோம்.இப் பிராந்தியத்தில் உலகளாவிய கவலை மற்றும் ஆபத்து அதிகரிப்பதற்கான அபாயத்தைக் காண்கிறோம் என்று லெபனான் பிரதமர் நஜிப் மிகாதி கூறியதாக IRNA (இர்னா) எனப்படும் இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இதனிடையே, இந்த கொடூரமான கொலைக்கு கண்டனம் தெரிவித்த துருக்கிய வெளியுறவு அமைச்சு, தங்கள் சொந்த நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கு உயிர்த் தியாகம் செய்த இஸ்மாயில் ஹனியே போன்ற லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம் என் கூறியது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை