Jul 27, 2026
Thisaigal NewsYouTube
5 வயது சிறுவனின் கழுத்து, நெஞ்சை துளைத்த இரும்பு
தற்போதைய செய்திகள்

5 வயது சிறுவனின் கழுத்து, நெஞ்சை துளைத்த இரும்பு

Share:

கோத்தா மாருடு, மார்ச் 15 -

சபா, கோத்தா மாருடு, கம்பூங் தான்டேக் க்கில் மளிகைக் கடைக்கு தாயுடன் நடந்து சென்ற போது, கீழே தடுமாறி விழுந்த 5 வயது சிறுவனின் கழுத்து மற்றும் நெஞ்சு பகுதிகளை இரும்பு கம்பி துழைத்தது.

அதில், அவர் கடும் காயங்களுக்கு ஆளாகினார் .

நேற்று மாலை நேரத்தில் நிகழ்ந்த அச்சம்பவத்தைத் தொடர்ந்து, அச்சிறுவன் கோத்தா மாருடு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

அச்சிறுவனின் உடலிலிருந்து இரும்பை அகற்றுவதில், மருத்துவமனை தரப்பு சிரமத்தை எதிர்நோக்கியதை அடுத்து, தீயணைப்பு மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.

6 தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களைக் கொண்டு அச்சிறுவனின் உடலிலிருந்து அந்த இரும்புக் கம்பியை வெற்றிகரமாக அகற்றினர்.

பின்னர், மேல் நடவடிக்கைகளுக்காக அச்சிறுவன் மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்