May 22, 2026
Thisaigal NewsYouTube
மாற்றுத் திறனாளி பெண் கைது
தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளி பெண் கைது

Share:

காஜாங், ஜுன் 28-

தனது பெண் பிள்ளையை காரின் ஜன்னலில் பாதி உடல் வெளியே தெரியும்படி உட்கார வைத்து வாகனத்தை செலுத்தியதாக நம்பப்படும் மாற்றுத் திறனாளிப் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த சிறுமி மட்டுமன்றி இதர வாகனமோட்டிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்த மாற்றுத் திறனாளியின் இத்தகைய பொறுப்பற்ற செயலுக்காக அவர் தடுக்கப்பட்டுள்ளார் என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோம் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

ஜன்னல் வாயிலாக அந்தப் பெண் பிள்ளையின் உடல் தெரியும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் வேளையில் இது தொடர்பாக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் கடந்த ஜுன் 21 ஆம் தேதி பிற்பகல் 1.15 மணியளவில் காஜாங், பன்டார் துன் உசேன் பகுதியில் உள்ள ஒரு சாலையில் நிகழ்ந்திருப்பதாக ஏசிபி நஸ்ரோம் தெரிவித்தார்.

Related News