Sep 24, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலானில் தனிப்பட்ட வியூகத்துடன் களமிறங்கும் பாரிசான் நேஷனல்- அகமது ஜாஹித்
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலானில் தனிப்பட்ட வியூகத்துடன் களமிறங்கும் பாரிசான் நேஷனல்- அகமது ஜாஹித்

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான வியூகத்தை, அங்குள்ள அரசியல் சூழலுக்கு ஏற்ப பாரிசான் நேஷனல் வடிவமைத்துள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் நிலைமை மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் மாறுபடுவதால், அதற்கேற்ற அணுகுமுறையே கடைப்பிடிக்கப்படுவதாக அவர் கூறினார்.

தேர்தல் பிரசாரத்தின்போது தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்து, மக்களுக்கு பயனளிக்கும் கொள்கைகள் மற்றும்

வேட்பாளர்களின் திறமைகளை முன்னிறுத்துவதிலேயே பாரிசான் நேஷனல் கவனம் செலுத்தும் என்றும் அகமது ஜாஹித் மேலும் தெரிவித்தார்.

Related News