Sep 24, 2026
Thisaigal NewsYouTube
சென்னா தொகுதி: அந்தோனி லோக்கை எதிர்த்து போட்டியிடப் போவதில்லை என ஆல்பர்ட் தே அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

சென்னா தொகுதி: அந்தோனி லோக்கை எதிர்த்து போட்டியிடப் போவதில்லை என ஆல்பர்ட் தே அறிவிப்பு!

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், சென்னா சட்டமன்றத் தொகுதியில் ஜசெக பொதுச்செயலாளர் அந்தோனி லோக்கை எதிர்த்துப் போட்டியிடப் போவதில்லை என வர்த்தகர் ஆல்பர்ட் டேய் அதிகாரப்பூர்வமாக .

பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு வழிவிடும் வகையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இது குறித்துத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆல்பர்ட் தே, சென்னா தொகுதியில் போட்டியிடும் பாரிசான் நேஷனல் வேட்பாளருக்குத் தனது முழு ஆதரவை வழங்கப் போவதாகவும், வரும் சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் அன்று அவருடன் நேரில் செல்லவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் ஆதரவுடன் இத்தொகுதியில் போட்டியிட அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஆனால், தற்போது அந்தோனி லோக் அவர்களைத் தோற்கடிக்கவும், நெகிரி செம்பிலானில் பக்காத்தான் ஹரப்பான் ஆட்சியை வீழ்த்தவும், பாரிசான் வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சாரம் செய்யப்போவதாக அவர் கூறியுள்ளார்.

Related News