புத்ராஜெயா, ஜனவரி.05-
தனது சக நாட்டவரான ஆடவர் ஒருவருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக 31 வயது ரோஹிங்யா ஆடவருக்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
முஹமட் அலாம் அப்துல்லா என்ற ஆடவருக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ஜோகூர் பாரு உயர் நீதிமன்றம் விதித்த 30 ஆண்டு சிறை மற்றும் 12 பிரம்படித் தண்டனை தீர்ப்புக்கு எதிராக அந்த வெளிநாட்டு ஆடவர் செய்து கொண்ட மேல்முறையீட்டை ஏற்ற மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற டத்தோ அஸ்மான் அப்துல்லா இத்தீர்ப்பினை வழங்கினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரவு, ஜோகூர் பாரு, பெர்மாஸ் ஜெயா, Persiaran Senibung- கில் உள்ள Stellar Senibung கட்டடத்தின் பின்புறம் மியன்மார் நாட்டைச் சேர்ந்த 35 வயது அபு தஹேர் என்பவருக்கு மரணம் விளைவித்ததாக அந்த ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.








