Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கொள்ளையன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கொள்ளையன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்

நவ. 28-

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவன் என்று நம்பப்படும் உள்ளூரைச் சேர்ந்த கொள்ளையன் ஒருவனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

நேற்று இரவு 10.30 மணியளவில் சிரம்பான், ஜாலான் பெர்சியாரான் சிரம்பானில் 38 வயதுடைய அந்த கொள்ளையன் சுட்டு வீழ்த்துப்பட்டதாக நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் Datuk Ahmad Dzaffir Mohd Yussof தெரிவித்தார்.

புக்கிட் அமான் போலீஸ் தலைமைகத்தைச் சேர்ந்த குற்றத்தடுப்பு பிரிவினர், ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான கறுப்பு நிற மெர்சடிஸ் ரக கார் ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
ஆனால், கிள்ளானைச் சேர்ந்த அந்த கொள்ளையன், தமது மெர்சடிஸ் வாகனத்தின் மூலம் போலீஸ் காரை மோத முற்பட்ட போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த கொள்ளையன் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டான் என்று Ahmad Dzaffir குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →