Dec 4, 2025
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக மூன்று இளைஞர்களுக்குத் தூக்கு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக மூன்று இளைஞர்களுக்குத் தூக்கு

Share:

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.12-

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக மூன்று இளைஞர்களுக்கு ஜோகூர் பாரு உயர் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்தது.

மூன்று சீன ஆடவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை பிராசிகியூஷன் தரப்பு, சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி அபு பாக்கார் காதார் தெரிவித்தார்.

41 க்கும் 48 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று நபர்கள், கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி காலை 7.30 மணியளவில் ஜோகூர், ஜாலான் தானா மேரா, தாமான் டேசா செமெர்லாங்கில் ஒரு குளத்துக்கு அருகில் கைவிடப்பட்ட ஒரு கொள்கலனில் ஒரு டன் எடை கொண்ட போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.

Related News