May 24, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தின் முடிவு TVET கல்வித்திட்டத்தின் வளர்ச்சிக்குத் துணைபுரியும்
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்தின் முடிவு TVET கல்வித்திட்டத்தின் வளர்ச்சிக்குத் துணைபுரியும்

Share:

கோலாலம்பூர் ,ஆகஸ்ட் 19

பொதுச் சேவையில் பல்வேறு வகையான திறன் பயிற்சி சான்றிதழின் தகுதியை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு, மலேசியாவில் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) கல்வித்திட்டத்தை மென்மேலும் உயர்த்த வழிவகுக்கும்.

போட்டிமிக்க இன்றைய வேலை சந்தையில் ஒருவர் கல்வியுடன் சேர்த்து திறன்களையும் மேம்படுத்தி கொள்வது அவசியம் என்று திறன் வாய்ந்த தொழிலாளர்களின் தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் முகமது ரிசான் ஹசன் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, அரசாங்கத்தால் வழங்கப்படும் திறன் பயிற்சி சான்றிதழ் தனிநபர்களை அந்தந்த துறைகளில் சிறந்து விளங்க தேவையான அறிவு மற்றும் நிபுணத்துவத்துடன் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் விவரித்துள்ளார்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை, TVET பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புகளுக்காக, எஸ்பிஎம் தகுதியுள்ள 26 சேவை திட்டங்களுக்கான நியமனத்தின் அடிப்படை, SVM தகுதிகளுக்கும் ஏற்றவாறு விரிவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.

Related News