Nov 27, 2026
Thisaigal NewsYouTube

பேராக் இளைஞர்கள் சொந்த ஊர்களிலேயே தங்கி வேலை செய்ய புதிய திட்டம் - மாநில அரசு ஆலோசனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேராக் இளைஞர்கள் சொந்த ஊர்களிலேயே தங்கி வேலை செய்ய புதிய திட்டம் - மாநில அரசு ஆலோசனை

பேராக் மாநில அரசாங்கம், தனது மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் சொந்த ஊர்களிலேயே தங்கி வேலை செய்வதற்கும், வெளியூர்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் திரும்புவதற்கும் வேலைவாய்ப்பு, வாடகைச் சலுகை, கிராமப்புறப் பணி மையங்கள் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றது.

இது தொடர்பாக பேராக் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் சிம்பாங் பூலாய் சட்டமன்ற உறுப்பினர் வோங் சாய் யி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அம்மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சராணி முஹமட், கிராமப்புறங்களில் வாடகைச் சலுகைகள், சமூகக் குடியிருப்புகள் மற்றும் தொலைதூரப் பணி மையங்களை அறிமுகப்படுத்துவது குறித்து விரிவான திட்டமிடல் தேவை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளையும் நல்ல ஊதியத்தையும் உறுதிப்படுத்தினால் மட்டுமே இளைஞர்கள் சொந்த ஊர்களில் தங்குவார்கள் என்றும், இல்லையெனில் அதிக வருமானம் தேடி சிங்கப்பூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு போன்ற நகரங்களுக்குச் செல்லும் நிலை தொடரும் என்றும் சராணி குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →