Oct 6, 2026
Thisaigal NewsYouTube

மக்கள் வசிக்கும் பகுதிகளில் 4ஜி இணையச் சேவை 99.75% – ஃபாஹ்மி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மக்கள் வசிக்கும் பகுதிகளில் 4ஜி இணையச் சேவை 99.75% – ஃபாஹ்மி

நாட்டில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 4ஜி தொலைத்தொடர்பு சேவை கடந்த ஜூலை மாத நிலவரப்படி 99.75 விழுக்காட்டை எட்டியுள்ளதாக தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

எனினும், கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் இலக்கவியல் வசதிகளில் இருந்து ஒதுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதும் அவசியம் என்று அவர் கூறினார்.

இதற்காக தேசிய இலக்கவியல் வலைப்பின்னல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், போதிய இணைய வசதி இல்லாத நாடு முழுவதும் 2,700 இடங்களுக்கு இணையச் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

13ஆவது மலேசியத் திட்டம் அரசாங்கத்தின் கொள்கை மட்டுமல்ல என்றும், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்த அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் ஃபாஹ்மி கூறினார்.

பல்கலைக்கழகங்கள், தொழில்துறை, ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பள்ளியின் பெயரைக் காப்பாற்ற மாணவர்களின் பாதுகாப்பை பலி கொடுக்கக்கூடாது! – அன்வார்

பள்ளியின் பெயரைக் காப்பாற்ற மாணவர்களின் பாதுகாப்பை பலி கொடுக்கக்கூடாது! – அன்வார்

மியன்மார் கைதிகள் நாடு திரும்பும் திட்டம்: கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுப்பி வைப்பு

மியன்மார் கைதிகள் நாடு திரும்பும் திட்டம்: கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுப்பி வைப்பு

தேர்வு பயத்தில் பள்ளிக் கட்டிடத்தின் 3ஆவது மாடியில் இருந்து விழுந்த 13 வயது மாணவன் படுகாயம்

தேர்வு பயத்தில் பள்ளிக் கட்டிடத்தின் 3ஆவது மாடியில் இருந்து விழுந்த 13 வயது மாணவன் படுகாயம்

இன நல்லிணக்கத்துக்கு தனிச்சட்டமா? பரிந்துரைகளை ஒற்றுமைத்துறை அமைச்சிடம் முன்வையுங்கள்’ –  அஸாலினா ஒத்மான் கூறுகிறார்

இன நல்லிணக்கத்துக்கு தனிச்சட்டமா? பரிந்துரைகளை ஒற்றுமைத்துறை அமைச்சிடம் முன்வையுங்கள்’ – அஸாலினா ஒத்மான் கூறுகிறார்

வணிக வளாகக் கழிவறையில் 18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை: 71 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு

வணிக வளாகக் கழிவறையில் 18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை: 71 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு

குழந்தைகளைக் குறிவைக்கும் செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு பாதுகாப்பு விதிகள்

குழந்தைகளைக் குறிவைக்கும் செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு பாதுகாப்பு விதிகள்