Sep 27, 2026
Thisaigal NewsYouTube
சமூக ஊடகத் தூண்டுதல்களுக்கு எதிராக 'அவதூறு சட்டத்தைப்' பயன்படுத்துவதை புக்கிட் அமான் தற்காத்தது
தற்போதைய செய்திகள்

சமூக ஊடகத் தூண்டுதல்களுக்கு எதிராக 'அவதூறு சட்டத்தைப்' பயன்படுத்துவதை புக்கிட் அமான் தற்காத்தது

Share:

அரசாங்கக் கொள்கைகள் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சையைத் தூண்டும் நபர்களுக்கு எதிராக 1948-ஆம் ஆண்டு அவதூறு சட்டத்தைப் பயன்படுத்துவதை போலீசார் நியாயப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தன் குற்றப் புலனாய்வுத் துறை சி.ஐ.டி. இயக்குனர் டத்தோ குமார் முத்துவேல் கூறுகையில், இத்தகைய தூண்டுதல்கள் இணையத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதோடு, சமுதாயத்தில் பகையை உருவாக்கும் அபாயம் கொண்டவை என்று தெரிவித்தார்.

குறிப்பாக, அரசு இலாகாக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவது சட்டவிரோதமானது என்று அவர் வலியுறுத்தினார்.

பிரதமரை விமர்சித்து வீடியோ வெளியிட்ட 'ஜோர்ஜெட் மைலா' என்ற டிக்டாக் பயனர் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் இந்த விளக்கத்தை டத்தோ குமார் தந்துள்ளார்.

இருப்பினும், இந்த கைது நடவடிக்கையை னித உரிமைகள் ஆணையமான SUHAKAM விமர்சித்துள்ளது. அரசாங்கத்தையும் தலைவர்களையும் விமர்சிப்பது கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்ட உரிமை என்றும், இத்தகைய கைதுகள் சட்டத்திற்குப் புறம்பானவை என்றும் சுஹாகம் தெரிவித்துள்ளது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்