Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்வதற்கு அரசாங்கம் இணக்கம்
தற்போதைய செய்திகள்

அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்வதற்கு அரசாங்கம் இணக்கம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.10-

சட்டத்துறை தலைவர் மற்றும் பப்ளிக் பிராசியூட்டர் ஆகியோர் தத்தம் அதிகாரங்களுக்கு ஏற்ப தனித்தனியாக செயல்படுவதற்கு ஏதுவாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் இன்று இணக்கம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அட்டர்னி ஜெனரல் அலுவலகமும், அரசு தரப்பு வழக்கறிஞரான பப்ளிக் பிராசியூட்டர் அலுவலகமும் தனது நிலைக்கு ஏற்ப வெவ்வேறு பங்களிப்பைக் கொண்டு இருக்கும்.

இவ்விரண்டையும் பிரிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டம் 145 விதி, 183 ஆவது விதி மற்றும் 42 ஆவது விதி ஆகியவற்றில் திருத்தம் செய்யப்படும் என்று பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்விரண்டையும் பிரிப்பது மூலம் சட்டத்துறை தலைவரின் பங்களிப்பு என்ன, பப்ளிக் பிராசிகியூட்டரின் பங்களிப்பு என்ன என்பது குறித்து சட்டத் சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் இன்று அமைச்சரவையில் விளக்கம் அளித்தார்.

இரண்டுமே சமமான அதிகாரத்தைக் கொண்டு இருக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

Related News