கோலாலம்பூர், அக்டோபர்.29-
தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப் மற்றும் பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட்டான பிஎன்பி, லண்டனில் Battersea மின்சார உற்பத்தித் திட்டத்தில் தாங்கள் கொண்டுள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கு திட்டம் கொண்டிருக்கவில்லை என்று அறிவித்துள்ளன.
அந்தத் திட்டத்தில் தாங்கள் செய்துள்ள பங்குகளின் மதிப்பீடு தொடர்ந்து உயர்வு கண்டு வரும் வேளையில் அவை ஆக்ககரமான பலனைத் தரக்கூடிய நிதி வளமாக இருப்பதால் அதில் முதலீடு செய்வதற்கு தாங்கள் தொடர்ந்து உறுதி பூண்டு இருப்பதாக அவை தெரிவித்துள்ளன.
Battersea திட்ட கூட்டு குழுமத்திற்கு Sime Darby Property மற்றும் SP Setia Berhad தலைமையேற்று இருப்பதால் அதில் உள்ள தங்கள் முதலீட்டைத் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ள விரும்புவதாக அந்த இரண்டு அரசு சார்பு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.








