Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சூரிய சக்தித் துறையில் இந்திய இளைஞர்களுக்குப் பயிற்சி:  வேலை வாய்ப்பை உருவாக்கும் புதிய முயற்சி!
தற்போதைய செய்திகள்

சூரிய சக்தித் துறையில் இந்திய இளைஞர்களுக்குப் பயிற்சி: வேலை வாய்ப்பை உருவாக்கும் புதிய முயற்சி!

Share:

சிரம்பான், ஆகஸ்ட்.10-

சிரம்பானில் நடைபெற்ற சூரிய சக்தித் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டத்தில், 25 இந்திய இளைஞர்கள் வெற்றிகரமாகப் பயிற்சியை நிறைவு செய்து, ஒரு புதிய வேலை வாய்ப்புக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர். இந்தத் திட்டம், வேகமாக வளர்ந்து வரும் சூரிய சக்தித் துறையில் வேலை வாய்ப்பை உருவாக்கி, இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெகிரி செம்பிலான் மாநிலச் ஆட்சிக்குழு உறுப்பினருன் ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான வீரப்பன் சுப்பரமணியம் தெரிவித்தார்.

இத்தகைய திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இத்திட்டம், மலேசியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கும் இந்தியச் சமூகம் முக்கியப் பங்காற்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் சிறப்பு அதிகாரி டிக்காம் லூர்ட்ஸும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Related News