லக்னோ,ஜூலை 03-
உத்தர பிரதேச ஆன்மீக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்; 116 பேர் உயிரிழந்தனர்
இந்தியா, உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116ஆக அதிகரித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பிரபல சாமியாரான போலோ பாபாவின் ஆன்மீக சொற்பொழிவை கேட்பதற்காக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
ஆனால், அவ்வளவு பக்தர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை. நிகழ்ச்சி முடிந்து பக்தர்கள் வெளியேறியபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அதில், சிக்கிய பலர் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்காத சக பக்தர்கள் அவர்கள் மீது ஏறி நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து வெளியே வந்தனர்.
இதனால், 30 பேர் வரை உயிரிழந்ததாக முதலில் தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 பேரை எட்டியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரின் நிலை மோசமாக இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹத்ராஸ் சோகம்.. உயிரிழப்பு 116ஆக உயர்வு! போலோ பாபா சாமியாரை காப்பாற்றுகிறதா உ.பி போலீஸ் ?








