Oct 14, 2026
Thisaigal NewsYouTube

வெளிநாட்டுத் தலைவர்கள் சந்திப்பதை அன்வார் தடுக்கிறார் – துன் மகாதீர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஷா ஆலாம், பிப்.19-

பல வெளிநாட்டுத் தலைவர்கள், தன்னைச் சந்திப்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தடுத்ததாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

அன்வாரால் தடுக்கப்பட்ட அந்த வெளிநாட்டுத் தலைவர்கள், தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் ஆவர் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

தம்மை சந்திப்பதற்கு இரண்டு மூன்று வெளிநாட்டுத் தலைவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். ஆனால், ஓ…., முடியாது என்று அன்வார் திட்டவட்டமாக சொல்லிவிட்டதாக துன் மகாதீர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அந்த தலைவர்கள் மலேசியாவிற்கு வந்த போது, தன்னை சந்திப்பதற்கு தங்கள் அவாவை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், அன்வாரோ…… முடியாது என்று தடுத்து விட்டார். இதனால் தமக்கு இருந்த வெளிநாட்டுத் தலைவர்களுடனான உறவுகள் துண்டிக்கப்பட்டு விட்டதாக துன் முகாதீர் குறிப்பிட்டார்.

தமது பால்ய நண்பர் காலஞ்சென்ற Tun Daim Zainuddin-னுடன் தாம் கொண்டிருந்த நப்பு குறித்து podcast Apa Cerita எனும் நிகழ்வில் கலந்துரையாடிய போது துன் மகாதீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அன்வாரின் ஆதரவாளர்கள் பலர், தம்மை சந்திப்பதற்கு ஆவல் கொண்டிருந்தும், அதற்கு அன்வார் தடை விதித்துள்ளார் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் அன்வார், தம்முடன் நல்லுறவை கொண்ருப்பாரேயானால் நாட்டில் பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என்று துன் மகாதீர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை