Mar 17, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் மீது 20 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன
தற்போதைய செய்திகள்

ஆடவர் மீது 20 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன

Share:

கடந்த இரண்டு ஆண்டு காலமாக வங்கிகள் மற்றும் மருந்தகங்கள் ஆகியவற்றை இலக்காக கொண்டு கொள்ளையடித்து வந்ததாக நம்பப்படும் ஐந்து குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

39 வயது முகமது சுபியான் வஹாப் என்ற அந்த நபர், கத்தி முனையில் ரொக்கப்பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்ததாக கூறி, இரு வெவ்வேறு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டார்.

கத்தியைக் காட்டி 13 கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், கும்பலாக 7 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டன.

நிறுவனம் ஒன்றின் டெக்னிஷனாக வேலை செய்து வந்ததாக கூறப்படும் இந்நபர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இக்குற்றங்களை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு