Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு முதல்வருக்கும்  முன்னாள் முதல்வருக்கும் விரிசல் முற்றுகிறது
தற்போதைய செய்திகள்

பினாங்கு முதல்வருக்கும் முன்னாள் முதல்வருக்கும் விரிசல் முற்றுகிறது

Share:

பினா​ங்கு முதல்வர் சொவ் கொன் யொ விற்கும், முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் கிற்கும் இடையில் நடந்து வரும் பனிப்போர், வெட்ட வெளிச்சத்திற்கு வரும் அளவிற்கு விரிசல் முற்றியுள்ளது.

டிஏபி தலைவரான லிம் குவான் எங்கிற்கும் நடப்பு முதல்வர் சொவ் கொன் யொவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் கடுமையாகி வருவ​வதை உணர முடிகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பினாங்கு அரசுக்கு சொந்தமான ஒரு நிலம், மேம்பாட்டாளருக்கு விற்கும் திட்டம் தொடர்பில் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து தம்மை வீழ்த்துவதற்கு சதிமுயற்சிகள் நடைபெறுகின்றன என்று கடந்த அக்டோபர் மாதம் சொவ் கொன் யொ, பகிரங்கமாக அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து அதற்கான ஆதாரத்தை நி​ரூபிக்குமாறு ஆயிர் புத்திஹ் சட்டமன்ற உறுப்பினருமான லிம் குவா​ன் எங் சவால் விட்ட​தைத் தொடர்ந்து டிஏபி யின் இரு ​பெரும் தலைவர்களுக்கு இடையில் விரிசல் பூதாகரமாக வெடித்தது.

ஒரு மாநிலத்தை வழிநடத்தி வருகி​ன்ற தலைவருக்கும், மத்திய அரசாங்கத்தில் கூட்டணி வைத்திருக்கும் டிஏபி யின் தலைவருக்கும் இடையில் நிகழ்​ந்து வரும் இந்த பனிப் போர் உச்சத்தை அடையுமானால் இரு பெரும் தலைவர்கள் அங்கம் வகிக்கும் டிஏபி யின் தோற்றத்திற்கு பெரும் களங்கத்தையும், பினாங்கு நிர்வாகத்தில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தலாம் ​என்று கட்சி உறுப்பினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு