ஷா ஆலாம், செப்டம்பர்.28-
சிலாங்கூர் மாநிலத்தின் அரசி தெங்கு பெர்மைசுரி நோராஷிகின் அவர்களின் தாயார், ஏசா தாஹார் அம்மையார் முதுமை காரணமாக இன்று அதிகாலை 5.15 மணியளவில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 82. இந்தச் சோகச் செய்தி சிலாங்கூர் அரச அலுவலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரது நல்லுடல், இன்று ஸோஹோர் தொழுகைக்குப் பிறகு ஷா ஆலம் அரசக் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும்.








