Feb 8, 2026
Thisaigal NewsYouTube
தடையை மீறி 'காரா' பேரணி: முக்கிய ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட 19 பேர் கைது
தற்போதைய செய்திகள்

தடையை மீறி 'காரா' பேரணி: முக்கிய ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட 19 பேர் கைது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.08-

கோலாலம்பூரில் தடையை மீறிப் பேரணி நடத்தியது தொடர்பாக, அதன் ஒருங்கிணைப்பாளர் ஸம்ரி வினோத் உள்ளிட்ட 15 ஆண்களையும் 4 பெண்களைப்யும் காவற்படையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர். சட்டத்திற்குப்புறம்பான வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்தப் பேரணி குறித்து நாடு முழுவதும் இதுவரை 131 புகார்கள் பதிவாகியுள்ளதாக கோலாலம்பூர் காவற்படைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தப் பேரணிக்கு முன்பே அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 100 பேர் சோகோ வணிக வளாகம் அருகே திரண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய நபர்கள் விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள வேளையில், மற்ற 17 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான செயல்களைத் தவிர்க்கவே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், பொதுமக்கள் எவரும் 3R விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் ஃபாடில் மார்சுஸ் அறிவுறுத்தியுள்ளார்.

Related News